CSK IPL 2026 Mini Auction Strategy: 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக மினி ஏலம் டிசம்பர் நடுப்பகுதியில் நடைபெறுகிறது. இதற்காக தீவிரமாக தயாராகி வந்த ஐபிஎல் அணிகள் நேற்று (நவம்பர் 15) விடுவிக்கப்பட்ட மற்றும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு 12 வீரர்களை விடுவித்தது. இதில் டிரேட் மூலம் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து வாங்கிவிட்டு சாம் கரன் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை கொடுத்தனர்.
Add Zee News as a Preferred Source
சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்த நிலையில், அவர் கேப்டன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டே கேப்டனாக தொடருவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்தது. இந்த நிலையில், சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரர்களை வைத்து ரசிகர்கள் பிளேயிங் 11-ஐ உருவாக்கி வருகின்றனர். சிஎஸ்கே அணிக்கு பிரதான பிரச்சனையாக இருப்பது பிளேயிங் 11ல் சரியான ஒரு பினிஷர் இல்லை என்பதுதான். அணியில் தோனி இருந்தாலும், அவரால் முன்பு போல் போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க முடியவில்லை. அதன் காரணமாக மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அண்ட்ரே ரஸ்ஸல், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற வீரர்களுக்கு ஆர்வம் காட்ட அதிக வாய்ப்பிருக்கிறது.
CSK: சிஎஸ்கே பிளேயிங் 11 எப்படி இருக்கும்
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்குவார்கள். அதன் பின்னர் 3வது இடத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வருவார். நம்பர் 4 பேட்டிங் வரிக்சையில் டிவால்ட் பிரெவிஸ், 5வது இடத்தில் சிவம் துபே ஆகியோர் விளையாட வாய்ப்புகள் உள்ளன.
CSK: 6வது மற்றும் 8வது இடத்தில் ஆல்-ரவுண்டர்கள் தேவை
6வது இடத்தில் சென்னை அணிக்கு ஒரு வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் தேவை. அதற்கு ரஸ்ஸல் போன்ற வீரரை மினி ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும். இல்லை என்றால் ஜேமி ஓவர்டன்னை அந்த இடத்தில் களமிறக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது. 7வது இடத்தில் எம்.எஸ். தோனி களமிறங்குவார். இதையடுத்து 8வது இடத்தில், ஒரு இந்திய ஆல்-ரவுண்டருக்கு சிஎஸ்கே அணி செல்லும். அதாவது ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு இந்திய வீரர் தேவை. அதற்கு ஸ்ரேயாஸ் கோபாலை களமிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் இவர் ஸ்பின்னராக மாட்டுமே செயல்படுவார் என்பதால், மஹிபால் ரோம்ரோர் போன்ற ஒரு வீரருக்கு சிஎஸ்கே அணி செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.
9வது இடத்தில் அன்சுல் கம்போஜ் மற்றும் 10வது இடத்தில் நேதன் எல்லீஸ் களமிறங்க வாய்ப்புள்ளது. நம்பர் 11ல் நூர் அகமது விளையாடுவார். இம்பேக்ட் வீரராக கலீல் அஹ்மத்தை பயன்படுத்தும் திட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருப்பதாக தெரிகிறது.
CSK: சேப்பாக்கில் மட்டும் விளையாடுகிறாரா தோனி?
சென்னை அணியின் அடையாளமாக காணப்படும் தோனி, வரும் 2026 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்ற செய்திகள் பரவி வருகின்றன. இதனால் உர்வில் படேலை பிளேயிங் 12ல் கொண்டு வர முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
About the Author
R Balaji