குண்டும் குழியுமான சாலை; சிக்னலும் இல்லை – போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மண்ணூர்பேட்டை

சென்னை: தொழிற்​பேட்டை பகு​தி​யான மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் குழி​யு​மாகவும், சிக்​னல் இல்​லாத​தா​லும் அவ்​வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரு​கின்​றனர். சென்னை – திரு​வள்​ளூர் நெடுஞ்​சாலை (எம்​டிஹெச்​.​சாலை) மற்​றும் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டைக்கு செல்​லும் இணைப்​புச் சாலைகள் இணை​யும் பகு​தி​யில் மண்​ணூர்​பேட்டை சந்​திப்பு அமைந்​துள்​ளது.

அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை, முகப்​பேர் போன்ற பகு​தி​களுக்கு செல்​லும் வாக​னங்​கள் மண்​ணூர்​பேட்டை வழி​யாகத் தான் தினந்​தோறும் சென்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் சமீப கால​மாக மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் குழி​யு​மாக காட்​சி​யளிக்​கிறது.

சாலை​யின் பெரும்​பாலான பகு​தி​கள் பெயர்ந்​து, பள்​ளங்​கள் நிறைந்​திருக்​கின்​றன. ஜல்லி கற்​கள் சாலை​யெங்​கும் சிதறி கிடக்​கின்​றன. அதே​போல் முறை​யான சிக்​னல் மற்​றும் யூ-டர்ன் வசதி இல்​லாத​தால் அருகே உள்ள பகு​தி​களுக்கு செல்​லும் வாக​னங்​கள் எம்​டிஹெச் சாலை​யில் அங்​குமிங்​கு​மாக குறுக்கே புகுந்து சென்று வரு​கின்​றன. இதன் விளை​வாக தினசரி போக்​கு​வரத்து நெரிசல் என்​பது சகஜ​மாகி, மக்​கள் அலைச்​சலுக்கு ஆளாகி வரு​கின்​றனர்.

இதுதொடர்​பாக அம்​பத்​தூர் பகு​தியை சேர்ந்த வாகன ஓட்டி மணி​கண்​டன் என்​பவர் கூறுகை​யில், தின​மும் அலு​வலக நேரங்​களில் மண்​ணூர்​பேட்​டையை கடந்து செல்ல 30 நிமிடங்​களாகிறது. மழை நேரத்​தில் மழைநீர் தேங்​கு​வ​தால் பள்​ளங்​கள் தெரி​யாமல் குழிகளில் வாக​னங்​களை இயக்​கு​வ​தால் சேதமடைகின்​றன.

முகப்​பேர், கோல்​டன் காலனி, சத்யா நகர் செல்​வதற்​காக வரும் வாக​னங்​கள் முறை​யான சிக்​னல் இல்​லாத​தால், அவர்கள் விருப்​பத்​துக்கு செல்வதால் போக்​கு​வரத்து நெரிசல் அதி​கரிக்​கிறது. எனவே மண்​ணூர் பேட்​டை​யில் சாலைகளை பழுது​பார்க்க தேவை​யான நடவடிக்​கைகளை சம்​பந்​தப்​பட்ட துறை அதி​காரி​கள் மேற்​கொள்ள வேண்​டும். போக்​கு​வரத்து நெரிசலை குறைக்க முறை​யான சிக்​னல் வசதி அல்​லது யூ-டர்ன் வசதியை ஏற்​படுத்தி தர வேண்​டும்​ என்​ற கோரிக்​கை வலுக்​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.