அடுத்தடுத்து வரவிருக்கும் XEV 9s, eVitara, Sierra.EV என மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவிகள்.! | Automobile Tamilan

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் விற்பனை கனிசமாக உயர்ந்து வரும் நிலையில் நாட்டின் முதன்மையான மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட மஹிந்திராவின் மூன்றாவது BE வரிசையின் XEV 9s மற்றும் பிரபலமான ஐகானிக் சியரா மாடலை தழுவிய சியரா.EV என மூன்று விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.

நவம்பர் 27 மஹிந்திரா XEV 9s

ஏற்கனவே மஹிந்திரா காட்சிப்படுத்தி XUV.e8 கான்செப்ட் ஆனது சந்தையில் உள்ள XUV700 எஸ்யூவி அடிப்படையிலான மாடல் தற்பொழுது XEV 9s என்ற பெயரில் 7 இருக்கை பெற்ற எஸ்யூவி மாடலாக வரவிருக்கின்றது.

முன்பாக இந்நிறுவனம் பல்வேறு டீசர்களை வெளியிட்டுள்ள நிலையில் முன்பாக கிடைக்கின்ற XEV 9e மாடலின் அடிப்படையிலான பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொள்ள உள்ள புதிய 7 இருக்கை காரிலும் மூன்று ஸ்கீரின் செட்டப் கொடுக்கப்பட்டு மிகவும் தாராளமான இடவசதியுடன் பல்வேறு பீரிமியம் வசதிகளை பெற்றிருக்கும்.

பேட்டரி ஆப்ஷன்களை தற்பொழுது மஹிந்திரா தெளிவுப்படுத்தவில்லை, இருந்தாலும் எக்ஸ்இவி 9எஸ் காரில் முந்தைய மாடல்களில் உள்ள 59Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள  பவர்  231hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 542 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.

அடுத்து, டாப் வேரியண்ட் 79Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள XEV 9e வேரியண்ட் பவர்  286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ள இதனை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. XEV 9s விலை அனேகமாக ரூ.23 லட்சம் முதல் துவங்க வாய்ப்புள்ளது.

mahindra xev 9s electric teasedmahindra xev 9s electric teased

டிசம்பர் 2 மாருதி சுசூகி eVitara

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற மாருதி சுசூகியின் இவிட்டாரா எஸ்யூவி டிசம்பர் 2ல் வெளியிடப்பட்டு உடனடியாக டெலிவரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாடலுக்கான பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை 49kWh மற்றும் 61kWh என இருவிதமாக கிடைக்க உள்ளது.

மாருதி குறிப்பாக போட்டியாளர்களுக்கு இணையான இன்டீரியர் வசதிகளை வழங்குவதுடன் பாதுகாப்பு சார்ந்தவற்றில் பல்வேறு நவீன அம்சங்களுடன் ADAS சார்ந்தவற்றை கொண்டிருக்கும்.

49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டாருடன் வரக்கூடும், ஆனால் இந்திய சந்தைக்கு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் தற்பொழுது வரவில்லை சற்று தாமதமாக வரக்கூடும்.

மாருதி இ விட்டாரா விலை அனேகமாக ரூ.17 லட்சம் முதல் துவங்க வாய்ப்புள்ளது.

maruti suzuki e Vitara launch soonmaruti suzuki e Vitara launch soon

டாடா சியரா.EV

நவம்பர் 25ஆம் தேதி ICE சியரா விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதே நாளில் இந்த புதிய 5 இருக்கை சியரா இவி சந்தைக்கு வெளியிடப்பட்டு விலை அனேகமாக ரூ.16 முதல் ரூ.18 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.

பேட்டரி ஆப்ஷனை தொடர்பாக எந்த உறுதியான விபரத்தையும் டாடா தெளிவுப்படுத்தவில்லை என்றாலும், கர்வ்.இவி காரில் உள்ள பேட்டரிகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் அதிகாமாக உள்ள நிலையில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் பெறக்கூடும்.

45kwh பேட்டரி பேக் ஆப்ஷனில் அதிகபட்சமாக 150 PS பவர் மற்றும் 215 NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 502 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.

55kwh பேட்டரி பேக் ஆப்ஷனில் அதிகபட்சமாக 167 PS பவர் மற்றும் 215 NM டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 585 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். நவம்பர் 25ல் சியரா Ice வரும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அடுத்த சில வாரங்களுக்கு பிறகு இவி வெளியாகலாம்.

upcoming tata sierra ev suvupcoming tata sierra ev suv

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.