கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே நான்கு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வந்தனர்.
அவர்களின் தாய் 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சமீபத்தில் அவர்களது தந்தையும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அந்த 4 குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர்.
இதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது,
“இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களின் எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!
இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.
நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன்.
மாலை, மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார்.
இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்!”
இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!
️ இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.
☀️ நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி,… https://t.co/y3Oor4mTLA
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 17, 2025