சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதியில் இந்திய வீரரான லக்ஷயா சென், சீன தைபேயின் சோய் டின் சென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இழந்த சென், அடுத்த 2 செட்டுகளை போராடி கைப்பற்றி வெற்றி பெற்றார். லக்ஷயா சென் இந்த ஆட்டத்தில் 17-21 – 24 -22 மற்றும் 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இவர் இறுதிப்போட்டியில் ஜப்பானின் யுஷி டனகா உடன் மோத உள்ளார்.
Related Tags :