`2,800 ஆமை குஞ்சுகள்' சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தல் – சுங்கத்துறை தீவிர விசாரணை

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் நடைபெற்று வருகின்றன.

இங்கு வரும் பயணிகளில் பெரும்பாலோர் தொழில்கள், வேலைகள், சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவாக இருக்கிறார்கள். இதனால் திருச்சி விமான நிலையம் எப்போதும் பிஸியாகவே இருக்கும்.

amai kunchukal

அப்படியே, சர்வதேச நாடுகளிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப்பொருட்கள் போன்றவற்றை கடத்த முயற்சிப்பதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில், உயிருடன் உள்ள 2,800 ஆமை குஞ்சுகள் கடத்த முயற்சிக்கப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஆமை குஞ்சுகளை கைப்பற்றி கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, ஆமை குஞ்சுகளை கடத்த முயற்சித்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம்

இந்த ஆமை குஞ்சுகள் இங்கு கடத்தப்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இந்த ஆமைகளை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலிருந்து வந்த பயணியிடம் இருந்து அரிய வகை 2,800 ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, இதுபோல் வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு கரன்சிகள், சிகரெட், போதைப் பொருட்கள், உயிரினங்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முற்றிலும் தடுக்கும் வகையில் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.