‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்தின், அடுத்து ‘பகீரா’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.
இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது அஜித்தை வைத்து ‘AK64’ படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிக் ரவிச்சந்தின் அஜித்தை வைத்து இயக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார்.

“படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது. லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம். இது எனக்கு ஒரு ஸ்பெஷலானத் திரைப்படமாக இருக்கும்.
‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பிறகு சார் இந்தப் படத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்.
அந்த பொறுப்போடு இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன்” என்றிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் அஜித் ‘ஜெண்டில்மென் டிரைவர்’ விருது வாங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆதிக் ரவிசந்திரன், ” அவருடைய விஷன் நமக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்.

சினிமாவை எந்த அளவிற்கு அஜித் சார் நேசிக்கிறாரோ அந்த அளவிற்கு அவருடைய பேஷனான ரேஸிங்கையும் நேசிக்கிறார்.
அதன் மூலம் நம் நாட்டிற்கும் பெருமை சேர்த்து தந்திருக்கிறார். கார் ரேஸிங்கில் அடுத்த முறையும் அவர் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என கூறியிருக்கிறார்.