சென்னை: ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்பபோவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.‘ பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 2026 ஜன.6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவ தாக ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களின் உயர்நிலை குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், தியோடர் ராபின்சன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் […]