ஹோண்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அமேஸ் செடான் பாரத் கிராஷ் டெஸ்டில் வயது வந்தோர் பாதுகாப்பில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும், 4 நட்சத்திர மதிப்பை குழ்ந்தைகளுக்கான பாதுகாப்பினை கொண்டுள்ளது.
மாருதி டிசையர் செடானுக்கு போட்டியாக அமைந்துள்ள ஹோண்டா அமேஸ் காரும் 5 ஸ்டார் பாதுகாப்பைப் பெற்றிருப்பது உறுதி செய்துள்ளது.
Honda Amaze BNCAP Test results
மூன்றாம் தலைமுறை புதிய அமேஸ் கார் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பான புள்ளிகளைப் பெற்றுள்ளது
பெரியவர்களுக்கான பாதுகாப்பு (Adult Occupant Protection – AOP): மதிப்பெண்: 32.00-க்கு 28.33 புள்ளிகளை பெற்று மிக உயர்ந்த பாதுகாப்பு மதிப்பீடாகும். குறிப்பாக முன்பக்க மோதலில் (Frontal Offset) 16-க்கு 14.33 புள்ளிகளும், பக்கவாட்டு மோதலில் (Side Movable Barrier) 16-க்கு 14.00 புள்ளிகளும் பெற்றுள்ளது. இதன் மூலம் ஓட்டுநருக்கும் நல்ல பாதுகாப்பும், முன் பயணிக்கு நல்ல பாதுகாப்பும் வழங்குகிறது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு (Child Occupant Protection – COP): மதிப்பெண்: 49.00-க்கு 40.81 புள்ளிகளை பெற்றுள்ளது. டைனமிக் சோதனையில் (Dynamic Score) 24.00-க்கு 23.81 என மிகச்சிறந்த ஸ்கோரைப் பெற்றுள்ளது.


சோதனை செய்யப்பட்ட மாடல்களில் 6 ஏர்பேக்குகள், ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள், ESC மற்றும் சீட் பெல்ட் போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த பாதுகாப்பு மதிப்பீடு ஹோண்டாவின் அமேஸ் காரின் V (MT, CVT), VX (MT, CVT) மற்றும் ZX (MT, CVT) ஆகிய வேரியண்ட்களுக்குப் பொருத்தும் என கூறப்பட்டுள்ளது.