புதுடில்லி: எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை மே. 4 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பங்கு வெளியீட்டின் வாயிலாக, எல்.ஐ.சி., 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து,ஒரு பங்கின் விலை 902, 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. வரும் மே 4ம் தேதி துவங்கும் பங்கு வெளியீடு, 9 தேதியுடன் முடிவடைய உள்ளது.
மேலும், பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட உள்ளது. குறிப்பாக, பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் வரையிலும்; சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 40 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கலாம் என தெரிகிறது.
துவக்கத்தில், அரசிடம் உள்ள 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.அனேகமாக, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து, பங்கு வெளியீடு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம்.
இவ்வாறு தெரிவிக்கின்றன.
புதுடில்லி: எல்.ஐ.சி.,யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியை மே. 4 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பங்கு வெளியீட்டின் வாயிலாக, எல்.ஐ.சி., 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.