லிஃப்ட் விபத்து விவகாரம்: கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்தது. இதில், லிஃப்டிற்குள் இருந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மேஜிஸ்திரேட் மோகனப்ரியா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்..
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.