போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நர்சுகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின், தலைநகர் போபாலில், ஹமிதியா அரசு மருத்துவமனை உள்ளது. இதன் கண்காணிப்பாளரான, டாக்டர் மாராவி, ஐம்பதுக்கும் மேற்பட்ட நர்சுகளுக்கு இரவுப் பணியின்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ம.பி., சுகாதார துறை அமைச்சர் விஸ்வாஸ் சரங் கூறியதாவது:ஹமிதியா மருத்துவமனையில் நர்சுகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படும் புகாரை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மண்டல ஆணையர் குல் ஷன் பாம்ரா, இந்த விசாரணையை மேற்கொண்டு, அரசிடம் அறிக்கை அளிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே தவறு செய்த டாக்டர் மாராவி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி ம.பி., காங்., தலைவர் கமல்நாத் வலியுறுத்தியுள்ளார். சமீப காலமாக பெண்கள் மீதான குற்றங்களில், ம.பி., முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நர்சுகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.