
ரஜினியை சந்தித்த நம்பி நாராயணன்
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி சமீபத்தில் வெளியான படம் ‛ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட்'. அவரது வேடத்தில் மாதவன் நடித்து, இயக்கமும் செய்திருந்தார். விமர்சகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. தற்போது ஓடிடியிலும் இந்த படம் வெளியாகி உள்ளது.
இந்த படம் வெளியான சமயத்தில் படத்தை பாராட்டிய ரஜினி, அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய ஒரு படம் என பாராட்டியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ரியல் ஹீரோவான நம்பி நாராயணன் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்திற்கு சென்று ரஜினியை சந்தித்தார். இந்த போட்டோ வைரலானது.