சமீபத்தில் சோமேட்டோவில் பணிபுரிந்து வந்த தந்தை விபத்தில் சிக்கிய நிலையில், குடும்பத்திற்காக உணவு டெலிவரி செய்த சிறுவனின் வீடியோ இணையத்தில் பரவி வந்தது.
தற்போது கைக்குழந்தையுடன் சேர்த்து இரண்டு குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்யும் பெண்னின் வீடியோ சில தினங்களாக பரவி வருகின்றது.
சோமேட்டோவினை சேர்ந்த பெண் டெலிவரி பார்ட்னர் தனது கைக் குழந்தை, ஒரு சிறிய ஆண் குழந்தையுடன் சேர்ந்து உணவு டெலிவரி செய்து வந்து கொண்டுள்ளார்.
தந்தைக்கு விபத்து.. சோமேட்டோ-வில் டெலிவரி செய்யும் 7 வயது சிறுவன்.. டிரெண்டிங் வீடியோ..!

டெலிவரிக்கு பின்பு இப்படி தான்
இதனை பார்த்த செளரப் பஞ்வானி என்பவர், இது குறித்த வீடியோவினை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த பெண்ணிடம் இது குறித்து செளரப் பஞ்வானி கேட்க, அந்த பெண் டெலிவரி பார்ட்னர் தனது குழந்தை பிறப்பிற்கு பின்பில் இருந்து, இப்படி தான் டெலிவரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதனையும் சாதிக்கலாம்
இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு நாள் முழுவதும், வெயிலில் டெலிவரி செய்யும் அந்த பெண், நாம் விரும்பினால், நினைத்தால் வாழ்க்கையில் எதையும் செய்ய முடியும் என்ற உத்வேகத்தினை கொடுத்துள்ளார். நாம் இது அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்றும் பஞ்வானி தெரிவித்துள்ளார்.

சோமேட்டோவின் கருத்து
இந்த வீடியோவினை மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் இதனை தெரிந்து கொண்டுள்ள சோமேட்டோ நிறுவனம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உதவ தயாராக இருப்பதாகவும், குழந்தைகளின் பராமரிப்பு நலனுக்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளதாக தெரிகின்றது. செளரப் பஞ்வானியிடம் யார் அந்த் டெலிவரி பார்ட்னர் என்பது குறித்த விவரங்களையும் கேட்டறிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடின உழைப்பு
உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் மனதை உருக்குவதாக இருந்தாலும், இது அந்த பெண்ணின் விடா முயற்சியினை காட்டுகின்றது. வாழ்க்கையில் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதற்கு இவரை போன்ற பெண்களே சாட்சி.
எது எப்படியோ இந்த பெண்ணின் கடின உழைப்புக்கு நாமும் ஒரு சல்யூட் வைப்போமே.
zomato female delivery partner who delivered food with 2 children including an infant
zomato female delivery partner who delivered food with 2 children including an infant/கைக்குழந்தை உள்பட 2 குழந்தைகளுடன் உணவு டெலிவரி.. சோமேட்டோ டெலிவரி பெண் அசத்தல்!