உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம்

கடற்படை அதிகாரியான Dudley Malster குடும்பம் இவர்களுக்கு தங்கள் வீடு ஒன்றை தங்குவதற்காக அளித்தது.

சுமார் 15 வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் அளவுக்கு உக்ரைனில் தொழில் செய்து வந்துள்ளார்.

இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்டிருந்த உக்ரேனிய அகதி குடும்பத்தை, அவர்களின் பின்னணி அம்பலமான நிலையில் வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது பிரித்தானிய குடும்பம் ஒன்று.

ஐந்து சிறார்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட உக்ரேனிய அகதி குடும்பத்தை குடியிருப்பை விட்டு வெளியேற்ற அந்த பிரித்தானியருக்கு நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம் | Ukrainian Refugee Evicted By British Landlord

@east2west

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய குடும்பங்களில் 36 வயதான Maxim Hyryk குடும்பமும் ஒன்று.
இவர்கள் பிரித்தானியா வந்ததும், கடற்படை அதிகாரியான Dudley Malster குடும்பம் இவர்களுக்கு தங்கள் வீடு ஒன்றை தங்குவதற்காக அளித்தது.

உக்ரேனிய அகதிகளுக்கு உதவும் பொருட்டு பிரித்தானிய அரசின் திட்டத்தின் அடிப்படையில் Maxim Hyryk குடும்பத்தினர் Fareham பகுதியில் அமைந்துள்ள அந்த குடியிருப்பில் தங்கி வந்துள்ளனர்.

உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம் | Ukrainian Refugee Evicted By British Landlord

@w8media

ஆனால் நாளடைவில் இவர்களின் நடவடிக்கைகளால் Dudley Malster குடும்பம் பொறுமை இழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே, Maxim Hyryk யார் என்பதும் உக்ரைனில் அவரது தொழில் என்ன என்பதும் பிரித்தானிய பத்திரிகை ஒன்று அம்பலப்படுத்தியது.

Maxim Hyryk உக்ரைனில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர் மட்டுமின்றி, சுமார் 15 வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் அளவுக்கு உக்ரைனில் தொழில் செய்து வந்துள்ளார்.

உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம் | Ukrainian Refugee Evicted By British Landlord

@east2west

மேலும், Maxim Hyryk தமது மனைவி பிள்ளைகளுடன் துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் சொகுசாக விடுமுறைகளை கழித்துள்ளதும் அம்பலமானது.
இதுவும் Dudley Malster குடும்பம் தங்கள் வீட்டைவிட்டு இவர்களை வெளியேற்ற ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இருப்பினும், தற்போது லான்காஸ்டர் அருகே ஹெஸ்ட் பேங்க் பகுதியில் நான்கு படுக்கையறை கொண்ட வீடு ஒன்றை 6 மாதத்திற்கு வாடகை இல்லா ஒப்பந்தத்தின் கீழ் கண்டுபிடித்துள்ளார் Maxim Hyryk.

உக்ரேனிய அகதி குடும்பத்தை இரக்கமின்றி வெளியேற்றிய பிரித்தானிய பெண்மணி: அவரது பின்னணி தெரிந்ததால் ஆத்திரம் | Ukrainian Refugee Evicted By British Landlord

@east2west

இதனிடையே, குடியிருப்புக்கு வாடகை செலுத்த வேண்டும் என கூறி பிரித்தானிய பொதுமக்களிடம் இருந்து சுமார் 21,000 பவுண்டுகள் வரையில் நிதி திரட்டியுள்ளதாக Maxim Hyryk குடும்பம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.