பெங்களூரு வெள்ளம்: 100 மில்லியனுக்கும் அதிகமான க்ளைம்.. இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சிக்கலா?

பெங்களூருவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அந்நகரையே வெள்ளம் சூழ்ந்தது என்பதும் இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் வாகன உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான க்ளைம்கள் வந்துள்ளதாகவும் இன்னும் அதிக க்ளைம்கள் வர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.

2030ல் அதிக மில்லியனர்கள் கொண்ட நகரம்.. இந்தியாவின் இந்த நகரம் தான்.. ஆய்வில் தகவல்

பெங்களூரு வெள்ளம்

பெங்களூரு வெள்ளம்

பெங்களூர் நகரில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, பெரு வெள்ளம் அந்நகர மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கிய நிலையில் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு மக்கள் சேதமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்பட தங்கள் உடைமைகளுக்கான க்ளைம்களை விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்

வெள்ளத்தில் மூழ்கிய கார்கள்

செப்டம்பர் 5 முதல் மூன்று நாட்கள் பெய்த கனமழையால் பெங்களூரு நகரில் உள்ள ஐடி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் கோடீஸ்வர்களின் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. சொகுசு கார்கள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதால் சில கோடீஸ்வரர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து லாட்ஜில் தங்கும் நிலை ஏற்பட்டது.

இன்சூரன்ஸ் க்ளைம்கள்
 

இன்சூரன்ஸ் க்ளைம்கள்

இந்த நிலையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்புகளை மதிப்பீடு செய்ய தொடங்கியுள்ளதாகவும், பல க்ளைம்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தாக்கல் செய்யப்படுவதாகவும், காப்பீட்டு நிறுவனங்களும் சேதமான கார்கள் உள்பட வாகனங்களின் மதிப்பீடுகள் செய்யும் பணியை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இறுதி மதிப்பீடு

இறுதி மதிப்பீடு

இதுவரை தாக்கல் செய்த க்ளைம்களின் இறுதி மதிப்பீடு அடுத்த இரண்டு வாரங்களில் தெரியவரும் என்று கூறினாலும், பல நிறுவனங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான க்ளைம்களை கையாள்வதாக கூறியூள்ளன.

ரூ.100 மில்லியன்

ரூ.100 மில்லியன்

BMW, Mercedes மற்றும் Audis போன்ற விலை உயர்ந்த வாகனங்களின் க்ளைம்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன. செப்டம்பர் 13 ஆம் தேதி வரை பெங்களூரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாகனங்களின் இழப்பு ரூ.100 மில்லியனை தாண்டியுள்ளதாகவும், இது இன்னும் அதிகரிக்கும் என்றும் ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் இதுகுறித்து கூறியபோது, ‘வெள்ளப்பெருக்கு சம்பவத்திற்கு பின் இதுவரை 200க்கும் மேற்பட்ட க்ளைம்களை பெற்றுள்ளதாகவும், அதில் சுமார் 20% வாகனங்களின் சேத க்ளைம்கள் என்றும் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறியபோது சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள க்ளைம்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நெருக்கடி

நெருக்கடி

பெங்களூரு வெள்ளம் காரணமாக கோடிக்கணக்கில் காப்பீடு க்ளைம்கள் வந்து கொண்டிருப்பதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bengaluru Floods: Insurance companies are ready to face Rise In Claims massive rain damage

Insurers Brace For Rise In Claims After Bengaluru Floods From Rain Fury | பெங்களூரு வெள்ளம்.. 100 மில்லியனுக்கும் அதிகமான க்ளைம்.. இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சிக்கலா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.