பிக் பாஸ் சீசன் 6-ல் 24 போட்டியாளர்களா? களமிறக்கப்படும் விஜய் டிவி முகங்கள் – இதோ அடுத்த லிஸ்ட்!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் முதல் வாரம் தொடங்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது.

‘இவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்’ என ஓரளவு உறுதியாகத் தெரிய வருகிற சிலரது பெயர்கள் ஏற்கெனவே விகடன் தளத்தில் வெளியாகி இருந்தன.

அந்த வகையில் முன்னாள் கவர்ச்சி நடிகை விசித்ரா, நடிகை வனிதா விஜய்குமாரின் முன்னாள் கணவர் ராபர்ட், சீரியல் நடிகை ரச்சிதா, யூடியூபரும் சமீபத்தில் நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்தவருமான ரவீந்தர் ஆகியோரின் பெயர்களை வெளியிட்டிருந்தோம்.

பிக் பாஸ் சீசன் 6

தற்போது இதில் கலந்து கொள்கிற மேலும் இரண்டு பிரபலங்கள் குறித்த தகவல்கள் நமக்கு எக்ஸ்க்ளூசிவாகக் கிடைத்துள்ளன.

அவர்கள் சின்னத்திரைப் பிரபலங்களான நடிகை `மைனா’ நந்தினி மற்றும் அமுதவாணன். இருவருமே விஜய் டிவி மூலம் பிரபலமானவர்களே!

மைனா நந்தினி

மதுரையில் உள்ளூர் சேனலில் ஆங்கராக வேலை பார்த்து வந்த நந்தினியை ‘மைனா’ நந்தினி ஆக்கியது விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியல். இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்த ரச்சிதாவின் தோழியாக மதுரைத் தமிழில் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

மைனா நந்தினி

தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டவர், இந்த டிவிப் புகழை வைத்தே சினிமா வாய்ப்புகளையும் பெற்றார். சமீபத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘விக்ரம்’ படத்திலும் நடித்திருந்தார் இவர்.

முதலில் கார்த்திக் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் வேறு சில பிரச்னைகளால் தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு தற்போது நடிகர் யோகேஷ்வராமை திருமணம் செய்திருக்கிறார் நந்தினி.

அமுதவாணன்

விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சிதான் அமுதவாணனை அடையாளம் காட்டிய மேடைகள். தொடர்ந்து ‘ஜோடி’ உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இவரும் சினிமா பக்கம் வந்து ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நகைச்சுவை பிக் பாஸ் வீட்டைக் கலகலப்பாக்கலாம்.

அமுதவாணன்

இதுபோக, இந்த சீசனில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. அதாவது சினிமா, டிவி, மாடலிங் முதலான ஏரியாக்களில் இருந்து 18 பேரும் பொது மக்கள் தரப்பிலிருந்து சாமானியர்கள் 6 பேரும் கலந்துகொள்ள இருக்கிறார்களாம். அதற்கான ஆடிஷன்களும் நடந்திருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.