காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவபுரம் ஊராட்சியில் வசிப்பவர் மூதாட்டி வசந்த மகாலிங்கம். இவரது கணவர் மற்றும் மகன்கள் இறந்த நிலையில் கால்நடை வளர்ப்பதை தொழிலாகக் கொண்டு தனது ஜீவ அம்சத்தை கடத்தி வருகிறார். இந்த தள்ளாத வயதிலும் நேர்மையுடன் வாழ எண்ணி மூன்று ஆடுகளை வளர்த்து வந்த நிலையில் ஒரு ஆடு கடந்த சில மாதங்களுக்கு கருவூற்று இன்று அதிகாலை இரண்டு கன்றுகளை ஈன்றது. இதில் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டி வசந்த மகாலிங்கம் சற்று நேரத்திலேயே பெரும் அதிர்ச்சியை கண்டதும் கண் கலங்கினார்.
உடனடியாக அருகில் இருந்த நபர்கள் இது குறித்து விசாரித்த போது, ஆடு ஈன்ற போது ஒரு ஆட்டுக்குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் நடந்த நிலையில் மற்றொரு ஆட்டு குட்டி நான்கு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்ததாக கூறி அழுதுள்ளார். மனிதநேயம் காப்பாற்ற முடியாத நிலையில் இந்த சிறிய ஆட்டுக்குட்டியை எவ்வாறு காப்பாற்றுவது என்ற நிலையை கூறி அவர்களிடம் அழுதுள்ளார்.
இருப்பினும், சிறிது நேரத்திலேயே தனது மனதை தேற்றிக்கொண்டு அருகில் உள்ள வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு அளிக்கும் பால் ஊட்டியை பெற்று அதில் தான் பசிக்கு வைத்திருந்த பாலை அந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் மடியிலிட்டு வழங்கிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.
இது குறித்து மூதாட்டி வசந்தா கூறுகையில், அனைவரையும் இழந்து தனியாக வசிக்கும் இந்த நிலையில் இந்த கால்நடைகள் தனக்கு பெரிதும் பாசத்துடனும் தன்னுடைய இருந்த நிலையில், அதனுடைய பிரசவத்தில் இது போன்று நிகழ்ச்சி மனதை சிறிது நேரம் வருட செய்ததாகவும், மனிதனே மாற்றுத் திறனாளியாக இருக்கும் பொழுது கடும் சிரமங்களை சந்திக்கும் நிலையில், மனதை தேற்றிக்கொண்டுள்ளார்.
மேலும், இந்த ஆட்டுக் குட்டியை தொடர்ந்து காப்பாற்றிவிடுவேன் எனவும், மேலும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு வழங்கும் இலவச கறவை மாடு திட்டத்தில் தனக்கு கறவை மாடுகள் வழங்கினால், எவ்வித தடையின்றி அனைத்தையும் தன்னுடைய உறவினர் போல் வளர்ப்பேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.