சென்னை: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையின் கீழ் இதுவரை, தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டிஜிபி தெரிவித்துள்ளார்.
