உத்தரகாசி, உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, 10 மலையேற்ற வீரர்கள் பலியாகினர்; 18 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ளது, நேரு மலையேற்ற பயிற்சி மையம். இங்கு பயிற்சி பெற்ற 34 பேர், 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள திரவுபதி மலைச்சிகரத்தில் ஏறி விட்டு, நேற்று காலை கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் மலையேற்ற வீரர்கள் சிக்கினர்.இது குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர்கள் வாயிலாக அங்கு விரைந்தனர். இதில், 10 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. நான்கு உடல்கள் மட்டும் மீட்கப்பட்டன; ஆறு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர் வாயிலாக டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்னும், 18 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement