சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 20 வேலை நாட்களில் 2,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றமும் ஒன்றாகும். சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் செயல்பட்டு வருகிறது. இந்த மதுரைக் கிளையில் கடந்த 20 வேலை நாட்களில் 2,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதன்படி கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் 938 மூல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 776 ரிட் மனுக்களும் அடங்கும். இதைத் தவிர்த்து 147 மேல்முறையீடு ரீட் மனுக்கள், 1,147 இணைப்பு மனுக்கள் என மொத்தம் 2,000 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன.
Madras High Court Setting a New Benchmark!
Madurai Bench of the #madrashighcourt disposed of over 2,000 cases in just 20 working days. Beginning September 5, It has disposed of 938 main cases, including 776 writ petitions, 147 writ appeals, and 1,147 miscellaneous cases. pic.twitter.com/gYnfN2OKFS
— Ministry of Law and Justice (@MLJ_GoI) October 8, 2022