ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கிரே நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய கிணறு நீண்ட நாட்களாக வற்றியிருந்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் பத்து அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பி இருந்தது.
இதனைக் கண்ட அவரின் பதினைந்து வயது மகள் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். சில நேரத்திற்கு பிறகும் மகளைக் காணாததால் பதற்றமடைந்த மோகன்ராஜ் கிணற்றுக்கு அருகே சென்று பார்த்துள்ளார்.
அப்போது உயிருக்கு போராடிய நிலையில் தனது மகள் கிணற்றுக்குள் தவிப்பதைக் கண்ட மோகன்ராஜ் தீயணைய்ப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த சிறுமியைக் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.