காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பும்ரா காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.பல முன்னணி பவுலர்கள் காயம் காரணமாக விலகுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.