உதவும் உள்ளங்கள் என்ற தன்னார்வ அமைப்பு, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஆதரவற்ற குழந்தைகளுடன் ‘ஆனந்த தீபாவளி’ என்கிற பெயரில் கொண்டாடி வருகிறது.
25வது ஆண்டாக இன்று நடைபெற்ற ஆனந்த தீபாவளி திருவிழாவில் ஆதரவற்ற குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு ஆனந்த தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் சினிமா இயக்குனரும், உதயநிதிஸ்டாலின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் ஆகிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
இதை தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடியதை பெருமையாக கருதி‘உதவும் உள்ளங்கள்’ அமைப்புக்கு பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.
அந்தவகையில், ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதுபோன்று ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது கடமை என்றும் விழாவில் கிருத்திகா உதயநிதி பேசினார்.
இதன் பிறகு கிருத்திகா உதயநிதியிடம் செய்தியாளர்கள், ‘வருகின்ற சட்டப் பேரவை தேர்தலில், நீங்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினர்.
இதை கேட்டதும் கிருத்திகா உதயநிதி சிரித்துக்கொண்டே, ‘இது குறித்து எல்லாம் நான் எப்பவும் யோசித்தது கிடையாது. இப்படியெல்லாம் கேட்டால், என்னிடம் பதில் இருக்காது’ என கூறிவிட்டு சென்றார்.
ஏற்கனவே
குடும்பத்தினர் திமுகவை ஆக்கிரமித்துள்ளதாகவும், தமிழக அரசியலில் ஒவ்வொருவராக கால் பதித்து வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் கிருத்திகா உதயநிதி அளித்து இருக்கும் பேட்டியால்
தலைமை மட்டும் இல்லாமல் நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.