
இந்தியாவில் கடந்த 1ம் தேதி 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் 5 ஜி சேவையை துவக்கி வைத்தார். இதனையடுத்து ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் முதல்கட்டமாக குறிப்பிட்ட நகங்களில் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை தொடங்கி விட்டது.. காலப்போக்கில் இந்த சேவை அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் 90 சதவீத பகுதிகளுக்கு 5-ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் 4ஜி நெட்வொர்க்கை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளது. கடந்த ஆண்டு ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோ செல்போனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோவை நோக்கி நகர்ந்தனர். இதனால் பிஎஸ்என்எல் சரிவை சந்தித்தது. டிராய் வயர் லைன் இணைப்புகளை அதிகம் கொண்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் 73.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடத்தை பிடித்தததால் பிஎஸ்என்எல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது 5ஜி சேவை வந்து விட்ட நிலையில் பிஎஸ்என்எல் இன் 4G சேவைகளை முழுமையாக வெளியிடுவதற்கான காலக்கெடுவை வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வரும் 2023 ஜனவரிக்குள் BSNL-ன் 4G நெட்வொர்க் முழுமையாக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் 5ஜி சேவைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.