
கேரள மாநிலம் காசர்கோட்டில், மதராசாவிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை அபுபக்கர் சித்திக் என்பவர் முரட்டுத்தனமாகத் தூக்கி சாலையில் வீசினார்.
அபுபக்கரை கைது செய்த போலீசார் எவ்வித முன்விரோதமும் இன்றி ஏன் மாணவியை அவ்வாறு தூக்கி வீசினார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவர் போதையில் அவ்வாறு செய்தாரா ? என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.