கணவனை கொன்றுவிட்டு காதலனிடம் கதை சொன்ன மனைவி: மகளிடம் சிக்கிய ஆடியோ!


தந்தையை தந்திரமாக கொன்றது குறித்து தனது காதலனிடம் போனில் தெரிவித்த அம்மாவை ஆதாரத்துடன் அவரது சொந்த மகளே பொலிஸாரிடம் பிடித்து கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை கொன்ற மனைவி 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சனா ராம்தேகே என்பவரின் கணவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டார்.

கணவர் இரவில் தூங்கி கொண்டு இருக்கும் போது மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என்று மனைவி  ரஞ்சனா ராம்தேகே அனைத்து உறவினருக்கும் மூன்று மாதங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கணவனை கொன்றுவிட்டு காதலனிடம் கதை சொன்ன மனைவி: மகளிடம் சிக்கிய ஆடியோ! | Maharashtra Woman Murder Husbands Call RecordingRanjana Ramteke & husband-ரஞ்சனா ரந்தேகே & கணவர்

ஆனால் அவர் தான் கணவனை தூக்கத்தில் தலையணையை கொண்டு மூச்சிறைக்க வைத்து கொலை செய்துள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது.


மகளிடம் சிக்கிய ஆடியோ

 
தந்தை இறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு  மீண்டும் தாயை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த மகள், தாயின் தொலைபேசியை தற்செயலாக பார்த்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது தாய் ரஞ்சனா ராம்தேகே அவரது கணவனை எவ்வாறு கொலை செய்தேன் என்று அவரது காதலன் முகேஷ் திரிவேதி-யிடம் விளக்கும் ஆடியோவை கேட்டு மகள் பதறிப்போய் உள்ளார்.

கணவனை கொன்றுவிட்டு காதலனிடம் கதை சொன்ன மனைவி: மகளிடம் சிக்கிய ஆடியோ! | Maharashtra Woman Murder Husbands Call Recording

அதில் தனது கணவர் இரவு நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது தலையணையை நன்றாக வைத்து அழுத்தி கொன்றதாக காதலன்  முகேஷ் திரிவேதி-க்கு விளக்கியுள்ளார்.

அத்துடன் காலை எழுந்தவுடன் அனைத்து உறவினருக்கும் கணவன் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தாகவும், யாருக்கும் எத்தகைய சந்தேகமும் வரவில்லை என்றும் பேசியுள்ளார்.

காவல் நிலையத்திற்கு விரைந்த மகள்

தாயின் ஆடியோவை கேட்டு மிரண்டு போன மகள் உடனடியாக ஆடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து மனைவி ரஞ்சனா ராம்தேகே மற்றும் காதலன் முகேஷ் திரிவேதி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரித்ததில் கணவனை கொலை செய்ததை ரஞ்சனா ராம்தேகே ஒப்புக் கொண்டுள்ளார்.

கணவனை கொன்றுவிட்டு காதலனிடம் கதை சொன்ன மனைவி: மகளிடம் சிக்கிய ஆடியோ! | Maharashtra Woman Murder Husbands Call Recordingmaharashtra police-மகாராஷ்டிரா போலீஸ்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.