இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கு இடமில்லை! எடுத்த முக்கிய முடிவு


இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் இன்று தொடங்கும் நிலையில் இதில் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வல்லுநராக கலந்து கொண்டு தன் கருத்துகளை பகிர்வார் எனத் தெரிகிறது.

இந்தியா – நியூசிலாந்து தொடர்

அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கு இடமில்லை! எடுத்த முக்கிய முடிவு | Dineshkarthik Indian Cricket Player

ANI

மீண்டும் கிரிக்கெட் வல்லுனராக தினேஷ் கார்த்திக்

இந்த தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படவில்லை.
இந்தச் சூழலில் அவர் வலைதளம் மூலம் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் விளையாடும் முதல் டி20 போட்டி குறித்து கிரிக்கெட் வல்லுநராக தனது கருத்துகளை பகிர உள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் வர்ணனையாளராக செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.