தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முன்வரும் இலங்கை செல்வந்தர்கள் பலர்


சிட்னியில் உள்ள நீதவான் நீதிமன்றத்தால் நேற்று கடுமையான நிபந்தனைகளின் கீழ்
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க,
அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு உடனடியாக உள்ளூர் முகவரியை வழங்க
வேண்டியிருப்பதால், பணக்கார இலங்கை குடிமகன் ஒருவரின் வீட்டில் வசிப்பதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

150,000 அவுஸ்திரேலிய டொலர்களின் உத்தரவாதம் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின்
கீழ் அவருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.

இலங்கைப் பெண்

தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முன்வரும் இலங்கை செல்வந்தர்கள் பலர் | Danushka Gunathilaka Case Austria

இந்தநிலையில், மெல்பேர்னில் வசிக்கும் பெயர் குறிப்பிடப்படாத இலங்கைப் பெண்
ஒருவர் கிரிக்கெட் வீரருக்கு பிணை வழங்குவதற்காக முழுப் பணத்தையும் உடனடியாக
சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கிரிக்கெட் வீரருக்கும் இந்த பெண்ணுக்கும் உள்ள தொடர்பு அல்லது அவர்
வெறுமனே ஒரு ரசிகரா என்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சிட்னியில்
வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பல செல்வந்தர்கள் தனுஷ்கவுக்கு தங்குமிட வசதிகளை
வழங்குவதற்கும் அவர் தங்கியிருக்கும் காலத்தில் அவரது செலவுகளைக்
கவனிப்பதற்கும் முன்வந்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முன்வரும் இலங்கை செல்வந்தர்கள் பலர் | Danushka Gunathilaka Case Austria

தற்போதைக்கு, அவரைக் கவனிக்க பல தன்னார்வலர்கள் முன்வந்துள்ளமையால்,
கிரிக்கெட் வீரரின் தங்குமிடத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எந்த செலவும்
இல்லை,

எனினும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனுஷ்கவின் சட்டச் செலவுகளை தொடர்ந்து
செலுத்தவுள்ளது எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தநிலையில் வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.