வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாரணாசி: வாரணாசியில் நடக்கும் ‛காசி தமிழ் சங்கமம்’ ஒரு தனித்துவமான நிகழ்ச்சி என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
‘சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை’ இந்தியா கொண்டாடும் வேளையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை நிலைநிறுத்த, காசி மற்றும் தமிழகம் இடையேயான தொடர்பை மீண்டும் உணர்த்த, உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் டிச.,16 வரை ஒருமாதத்திற்கு ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதனை பிரதமர் மோடி நாளை (நவ.,19) துவங்கி வைக்க இருக்கிறார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், காளியாட்டம், கை சிலம்பம், பம்பை, சேர்வையாட்டம், பரதநாட்டியம் என வீரத்தையும் கலையையும் பிரதிபலிக்கும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நிகழ்ச்சி தொடர்பாக 50 வினாடிகள் ஓடும் வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ‛காசி தமிழ் சங்கமம் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி. நமது ஆழமான வேரூன்றிய பிணைப்புகளைக் கொண்டாடவும், உறுதிப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு’ என பதிவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement