உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: முதல் போட்டியிலேயே கத்தார் தோல்வி..அதிர்ச்சி கொடுத்த ஈகுவடார் கேப்டன்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஈகுவடார் அணி, போட்டியை நடத்தும் கத்தார் அணியை வீழ்த்தியது.

கேப்டனின் மிரட்டல் ஆட்டம் 

Al Bayt மைதானத்தில் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது.

போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈகுவடார் இதில் மோதின.

பம்பரமாய் சுழன்று ஆடிய ஈகுவடார் கேப்டன் என்னேர் வாலென்சியா, கத்தாரின் பாதுகாப்பு அரணை எளிதாக உடைத்தார்.

ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் தனக்கு கிடைத்தை பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட வாலென்சியா, நடப்பு உலகக்கோப்பையில் முதல் கோல் அடித்தார்.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: முதல் போட்டியிலேயே கத்தார் தோல்வி..அதிர்ச்சி கொடுத்த ஈகுவடார் கேப்டன் | Ecuador Beat Qatar First Match World Cup Football

@Reuters

அதனைத் தொடர்ந்து 31வது நிமிடத்தில் அவரே மீண்டும் ஒரு கோல் அடித்து மிரட்டினார்.

கத்தார் அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாததால், ஈகுவடார் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: முதல் போட்டியிலேயே கத்தார் தோல்வி..அதிர்ச்சி கொடுத்த ஈகுவடார் கேப்டன் | Ecuador Beat Qatar First Match World Cup Football

FIFAWorldCup
@Twitter

இந்த வெற்றியின் மூலம் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்த ஈகுவடார், மூன்று புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் கத்தார் அணியில் 4 வீரர்களும், ஈகுவடார் அணியில் இரண்டு வீரர்களும் மஞ்சள் அட்டை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.     

என்னேர் வாலென்சியா/Enner Valencia

 FIFAWorldCup
@Twitter

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: முதல் போட்டியிலேயே கத்தார் தோல்வி..அதிர்ச்சி கொடுத்த ஈகுவடார் கேப்டன் | Ecuador Beat Qatar First Match World Cup Football

 FIFAWorldCup @Twitter

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.