புகையிரத வேக வரையறைகளை விதித்து புகையிரத சேவை நேர அட்டவணையை முற்றிலும் மாற்றி அமைக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
புகையிரதங்கள் தடம் புரண்டு வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை
கருத்திற்கொண்டு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புகையிரத பாதையில் சேதமடைந்த இடங்களில் குறைந்த வேகத்தில் புகையிரதத்தை இயக்கும்
வகையில் வேகத்தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் மற்றும் உடமைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு. வேகத்தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.