ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் கோகுண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கேலா பவுடி காட்டில் இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் உடல்கள் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டன.
இது, கள்ளத்தொடர்பு அல்லது கவுரவக் கொலையாக இருக்கும் என போலீசார் நினைத்தனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார். அந்தப் பகுதியில் நடமாடிய பாலேஷ் குமார் என்ற சாமியாரை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இருவரையும் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ‘பாலேஷ் குமார் ஜோஷி கோகுண்டாவின் பத்வி குடாவில் உள்ள தந்திர வித்யாவில் பணிபுரிந்து வந்தார். அந்தப் பகுதியில் அவர் பிரபலம். மக்கள் தங்கள் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய அவரிடம் வழி கேட்டு வருவார்கள்.
சோனு குன்வர் என்ற இளம்பெண்ணின் திருமண வாழ்க்கை குழப்பமாக சென்று கொண்டிருந்தது. இதனால், தொடர்ந்து அவர் அங்கு வந்து செல்வது வழக்கம். அப்போது, இளைஞரான ராகுல் மீனாவும் சாமியாரிடம் வந்து சென்றார். அப்படி வந்து சென்றபோது சோனு குன்வருக்கும் ராகுல் மீனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இது, ராகுல் மனைவிக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர், இருவரையும் பிரிக்குமாறு சாமியாரிடம் கூறி உள்ளார். சாமியார் அதற்கு பூஜை மற்றும் பரிகாரம் செய்வதாகக் கூறி பணம் பறித்துள்ளார். ஆனால், காதல் ஜோடியின் நெருக்கம் அதிகமானதே தவிர இருவரும் பிரியவில்லை. இதனால் சாமியார் தனது பெயர் கெட்டுவிடும் என நினைத்து கள்ளக்காதல் ஜோடியை பிரிந்து செல்லுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் பிரியவில்லை.
இதனால் அவர்கள் இருவரையும் தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார். 5 ரூபாய்க்கு விற்கும் பெவிகுவிக் பசையை அதிகமாக வாங்கி அதனை ஒரு பாட்டலில் சேகரித்தார். பின்னர் ராகுலையும், சோனுவையும் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் இருவரும் தனிமையில் இருந்தால் நீங்கள் பிரியப்போவது இல்லை என கூறினார்.
இதனை நம்பிய அவர்கள் தனிமையில் உல்லாசத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீர் என சாமியார் மறைத்து வைத்து இருந்த பாட்டிலில் உள்ள பெவிகுவிக்க்கை இருவர் மீதும் கொட்டினார். இதில் அவர்கள் கண் மட்டும் வாயில் பெவிகுவிக் பட்டு பார்க்க சிரமப்பட்டனர் அப்போது சாமியார் கத்தி மற்றும் கற்களால் தாக்கி இருவரையும் கொலை செய்துள்ளார்’ என கூறினர்.