புதுடில்லி:’மெட்டா, டுவிட்டர், அமேசான்’ ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, ‘கூகுள்’ நிறுவனமும், 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.அண்மைக்காலமாக, டுவிட்டர் துவங்கி அமேசான் வரை, பல்வேறு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், செலவுகளைக் குறைக்கும் வகையில், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.அந்த வரிசையில், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ நிறுவனமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவுக்கு வந்துஉள்ளது.
மோசமாக பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அத்தகைய ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில், கிட்டத்தட்ட 6 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய கூகுள் முடிவு செய்துள்ளது. மொத்த ஊழியர்களில் 6 சதவீதம் என்பது, கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் ஆகும்.
கூகுள் நிறுவனம், மதிப்பீடு அடிப்படையில், ஊழியர்களின் செயல்திறனை அறிந்து, குறைவான மதிப்பீடு பெற்றவர்களை நீக்க முடிவு செய்துள்ளது.கடந்த காலாண்டில், கூகுள் நிறுவனம், ஏராளமானோரை பணியமர்த்தியது. ஆனால், அளவுக்கு அதிகமாக ஆட்களை நியமிப்பதாக, நிபுணர்கள் அப்போதே எச்சரித்தனர்.
தற்போது நிலவும் பொருளாதார சூழலால், வேறுவழியின்றி, இந்த ஆள் குறைப்பு முடிவுக்கு வந்துள்ளது, கூகுள் நிறுவனம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement