
21 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் செல்கிறார் ஜோதிகா
ஜோதிகா ஹிந்தி படத்தில் இருந்து தமிழ் படத்திற்கு வந்தவர். ஹிந்தியில் நடித்த முதல் படம் 'டோலி சஜா கே ரக்கீனா'. 1997ம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு பிறகு 2001ம் ஆண்டு 'லிட்டில் ஜான்' படத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு ஹிந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.
தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். அவரது மனைவியாக ஜோதிகா நடிக்கிறார். துஷார் இத்ராணி இயக்குகிறார்.
ஜோதிகா தற்போது மலையாளத்தில் தயாராகும் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். இதற்கு முன் அவர் மலையாளத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு சீதா கல்யாணம் என்ற படத்தில் ஜெயராம் ஜோடியாக நடித்திருந்தார்.