மக்களை ஊக்குவிக்கும் உதயநிதியை இளைஞர்கள் வாழ்த்த வேண்டும் – பொன்முடி

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான

பிறந்த நாள் நவம்பவர் 27 ஆம் தேதி கொண்டாடபடுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள திமுகவினர் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் ஏற்பாட்டின் பேரில் 450 நரிக்குறவர்களுக்கு அரிசி, துணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற் உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. ரத்ததான முகாமில் திமுக நிர்வாகிகள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் ரத்தானம் வழங்கினர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறியது; தமிழகம் முழுவதும் திமுக இளைஞரனி செயலாளர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடபடுவதாகவும், இளைஞரனி செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

மேலும், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற அடிப்படையில் இளைஞர்களையும், தமிழக மக்களையும் ஊக்குவித்து கொண்டிருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் உதயநிதியை வாழ்த்த வேண்டும் எனவும் வாழ்த்துவதற்கு வயது முக்கியமில்லை மனசு தான் முக்கியம் மனசு இருந்தால் போதும் அனைவரும் வாழ்த்தலாம் என அமைச்சர் பொன்முடி இவ்வாறு தெரிவித்தார்.

திமுகவின் அடுத்த முதல்வர் உதயநிதி தான் என்று கலைஞர் இருந்தபோது ஸ்டாலினை கொண்டாடியதை போல உதயநிதியையும் உடன் பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அவரோ சினிமா வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். எம்எல்ஏவாக தனது பொறுப்பை உதயநிதி முழு வீச்சில் செய்ய சினிமா பணிகள் அவருக்கு தடையாக இருந்து வருகிறது. இதனால், விரைவில் சினிமாவுக்கு என்று கார்டு கொடுத்து அரசியலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள உதயநிதி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.