இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி.சி-54 என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ‘ஓசன்சாட்03’ என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து சென்றது.
இந்த ராக்கெட் பல்வேறு பயன்பாடுகளை கொண்டது. இதன் மூலம் கடலின் வெப்பநிலையை கண்டறியலாம். பல அளவீடுகளை முன்கூட்டியே அறிய முடியும். மேலும் கடல் பற்றிய தகவல் பரிமாற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சரியான திசைவேகத்தில் ராக்கெட் சென்றதாகவும், சூரிய தகடுகள் சரியான முறையில் செயல்பட்டன என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அனைத்து செயற்கை கோள்களும் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் காற்றின் திசைவேகம், கடல் நீரோட்டத்தின் போக்கு போன்றவற்றை துல்லியமாக கண்டறிய முடியும், தெளிவான புகைப்படங்களும் கிடைக்கும். இன்று 56ஆவது முறையாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டில் 5ஆவது மற்றும் கடைசி முறையாக இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in