வேலைவாய்ப்பு உறுதிபடுத்தும் சட்டம் இயற்றப்படுமா? பதிலளிக்காமல் சென்ற பிடிஆர்!

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக நிதியமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக அவர்களை சந்தித்து பேசி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் மத்திய தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம், எல்லீஸ்நகர், திடீர்நகர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பயனளிகளுக்கு முதல்வரின் மருத்துவகாப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கைக்கால் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, அதிநவீன வாகனம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். 

பின்னர், அவர்களிடம் கலந்துரையாடிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பயனாளிகளின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அய்யப்ப சேவா சங்க அன்னதான நிகழ்ச்சியில் நிதியமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென அவர் கலந்து கொள்ளாததால், காத்திருந்த நிர்வாகிகள் அன்னதானத்தை வழங்கினர்.

மேலும், தமிழகத்தில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா? என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் சென்றார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.