போபால் : மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி, வங்கியில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை ஆறு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள கட்னி மாவட்டத்தில், தங்க நகை கடன் வழங்கும் வங்கி உள்ளது. நேற்று இங்கு புகுந்த ஆறு பேர் அடங்கிய கொள்ளை கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி, 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 3.5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளைஅடித்துச் சென்றது.
தகவல் அறிந்த போலீசார், வங்கியிலுள்ள கண்காணிப்பு கேமராவை சோதித்தனர். அதில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் பேசியதாவது:
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பீஹாரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் மீது பீஹாரிலும் பல வழக்குகள் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement