குவஹாத்தி : அசாமில் சத்து மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால், 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள சரைடியா மாவட்டத்தில் இரண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பாக இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரை காலாவதியானதாக இருக்கலாம். இது குறித்து விசாரித்து வருகிறோம்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement