மனித குலத்துக்கே பேராபத்து?; உயிர் பெற்றது ஜாம்பி வைரஸ்!

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா COVID 19 என பெயரிடப்பட்ட வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்டது. சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு நாடுகளே என்ன செய்வது? என புரியாமல் திகைத்து நின்றன.

இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் அடைப்பு என, பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

இந்நிலையில், தற்போது கொரோனா நோய் பரவல் ஒரளவு குறைந்ததை தொடர்ந்து, வழிபாட்டு தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?.. ஷாக் நியூஸ்; பாகம்-1

கடந்த 2 ஆண்டுகள் கோர தாண்டவம் ஆடிய கொரோனா தொற்று தற்போது குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஒட்டுமொத்த உலக மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் வகையிலான விவகாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருப்பது மனித குலமே பீதியில் உறையும் அளவுக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது ஐரோப்பாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் செர்பியாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு கீழே இருந்த சுமார் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ் என்கிற நோய் தொற்றை கண்டுபிடித்து உள்ளனர்.

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?.. ஷாக் நியூஸ்; பாகம்-2

இந்த ஏரியின் கீழ் உறைந்த கிடந்த சுமார் 12 வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். பருவ நிலை மாற்றம் காரணமாக இந்த ஏரி பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்தே கிடந்துள்ளது.

இதனால் இங்கிருந்த ஜாம்பி 12 வைரஸ்கள் ஏரியுடன் உறைந்து இருந்துள்ளது. தற்போது இந்த ஏரி உருகி உள்ள நிலையில் சில புதிய வைரஸ்களை ஐரோப்பாவை சேர்ந்த அராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள 2 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இந்த வைரஸ் மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாக புதைந்திருந்த ‘ஜாம்பி வைரஸ்’ என்பது தெரிய வந்துள்ளது.

சேலம்..கோவை பயணிகள் ஷாக்; முக்கிய ரயில்கள் திடீர் ரத்து!

இவை பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் உள்ளபோதிலும் இன்னும் மனிதர்களை தாக்கும் குணத்தை கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி இருப்பது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே சமயம் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ள ஜாம்பி வைரஸ்களை ஆய்வு செய்தபோது இவை பெரும்பாலும் அமீபா நுண்ணுயிரிகளை பாதிக்கும் திறன் கொண்டவையாகவே உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

அதே சமயம் விலங்குகள் அல்லது மனிதர்களை தாக்கும் ஏதாவது வைரஸ் இதேப் போன்று பனிப்பாறை உருகுவதால் மீண்டும் புத்துயிர் பெற்றால் அது மிகப்பெரிய பாதிப்பை தரும் என, ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.