திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலா தளத்தில் படகு இல்லம் மற்றும் இயற்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்றுலா தளத்திற்கு வந்திருந்த ஆந்திரா மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ள நபர்களிடம் பேசினார். அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள மலைப்பாதைக்கு நடந்தே ஏறிச்சென்று அத்தனாவூரில் ரூ மூன்று கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்க பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தமிழகத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு சுற்றுலா துறை வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழக முதல்வர் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஏலகிரியை கண்டறிந்து அதிக அளவில் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் சாகச சுற்றுலா தளம் அமைய சாத்திய கூறுகள் இருந்த நிலையில் அதற்காக தேர்வு செய்யப்பட்டு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கப்பட்டது.இதில் சாகச விளையாட்டு வீரர்கள் தங்கி பயிற்சி பெறலாம், தற்பொழுது பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுலா தளத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருவண்ணாமலை ஜவ்வாதுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலைக்கும், ராமேஸ்வரத்தில் பரப்பனசெய், இது இல்லாம்மள் கன்னியாகுமாரி சித்தாறு, தென்காசி குண்டாறு அணை, சென்னையில் குளவா ஏரி பூண்டி ஏரி உள்ளிட்ட பல இடங்களில் படகு குளங்களை அமைக்கப்படும் என கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.