பிரிட்டன்: 48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு பழமையான ”ஜாம்பி வைரஸ்”- ஐ ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இப்போது தான் கொரோனாவுக்கு பின், இயல்பு வாழக்கை திரும்பி வருகிறது. இந்நிலையில் உலகில் இருக்கும் பல்வேறு வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பல ஆண்டுகளாக ஏரியின் கீழ் உறைந்த கிடந்த 10க்கும் மேற்பட்ட வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் உள்ள இரு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஆய்வாளர்கள் “ஜாம்பி வைரஸ்” -ஐ கண்டறிந்தனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறியவதாவது: ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த “ஜாம்பி வைரஸ்” பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில், இருந்த போதிலும், அது இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற வைரஸ்கள் தாக்கினால், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் ரொம்வே அதிகம். அதே நேரம் விலங்குகள் அல்லது மனிதர்களைத் தாக்கும் எதாவது வைரஸ் இதேபோல பனிப்பாறை உருகுவதால் மீண்டும் புத்துயிர் பெற்றால் அது பெரியா பாதிப்பைத் தரும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement