பணியின்போது ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவப்பணியாளர்கள்: 23 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு


பிரித்தானியாவில், கோவிட் பரிசோதனை செய்யும் ஆய்வகத்தில், பணி நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஆய்வகப் பணியாளர்களால் 23 பேர் பலியானதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

39,000 பேருக்கு தவறான கோவிட் பரிசோதனை முடிவுகள்

ஆய்வகப் பணியாளர்களின் கவனக்குறைவால், கோவிட் பரிசோதனை செய்யும் தானியங்கி இயந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சினை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவிட் நோயாளிகளுக்கு, கொரோனா தொற்று இல்லை என தவறான பரிசோதனை முடிவுகளைக் கொடுக்க காரணமாக அமைந்துள்ளது.

மிகச்சரியாகக் கூறினால், 39,000 கோவிட் நோயாளிகளுக்கு, உண்மையில் கொரோனா தொற்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு கொரோனா இல்லை என அந்த ஆய்வகம் பரிசோதனை முடிவுகளைக் கொடுத்துள்ளது. இந்த விடயம் பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி மேற்கொண்ட விசாரணை ஒன்றினால் வெளியே வந்துள்ளது.

பணியின்போது ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவப்பணியாளர்கள்: 23 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு | Lab Blunder Led Thousands Covid Infections Deaths

பணி நேரத்தில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த ஆய்வகப் பணியாளர்கள்

இங்கிலாந்திலுள்ள Wolverhamptonஇல் செயல்படும் Immensa Test & Trace lab என்னும் ஆய்வகத்தில்தான் இந்த தவறுகள் நிகழ்ந்துள்ளன.

அந்த ஆய்வகத்தில் உள்ள பணியாளர்கள், பணி நேரத்தில் மதுபானம் அருந்திக்கொண்டும், ஆபாச படம் பார்த்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்துள்ளார்கள். இந்த விடயத்தை, அந்த பணியாளர்களே சொல்லி பெருமையடித்துக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

இப்படி கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு, தொற்று இல்லை என அந்த பணியார்கள் தவறாக பரிசோதனை முடிவுகளைக் கொடுத்ததால், 23 உயிரிழப்புகளும், 680 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலையும், 55,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்னும் விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.