பங்குகளை அதானி வாங்கியதால் முடிவு| Dinamalar

புதுடில்லி: என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து அதன் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா பதவி விலகி உள்ளனர்.

என்.டி.டி.வி.யின் 29.18 சதவீதம் அளவிலான பங்குகளை தொழிலதிபரான கவுதம் அதானியின் குழுமம் சமீபத்தில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா மற்றும் செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் புதிய இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதானி குழுமத்தின் 100 சதவீதம் முழுமையான துணை நிறுவனங்களில் ஒன்றான விஷ்வபிரதான் வர்த்தக தனியார் நிறுவனம், என்.டி.டி.வி.க்கு நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்களுக்கு உதவியாக இருந்த ஆர்.ஆர்.பி.ஆர். என்ற நிறுவனத்தின் 99.5 சதவீத பங்குகளை கடந்த ஆகஸ்டில் வாங்கியிருந்தது.

latest tamil news

இந்த ஆர்.ஆர்.பி.ஆர். நிறுவனம், என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்தது. அதனை, அதானி குழுமம் தன்வசப்படுத்தி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, என்.டி.டி.வி.யின் அடுத்த 26 சதவீத பங்குகளையும் விலைக்கு வாங்க அதானி குழுமம் முன்வந்தது. இதனால், என்.டி.டி.வி.யின் 55.18 சதவீத பங்குகள் அந்த குழுமத்திற்கு செல்லும். இது , அந்த குழுமம் என்.டி.டி.வி.யின் உரிமையாளராவதற்கு வழிவகுக்கிறது.

ஆனாலும் என்.டி.டி.வி.யின் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்துள்ளனர். இப்பொழுது என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து அதன் நிறுனவர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி பதவி விலகி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.