அணில் அமைச்சர் ஆதார் அமைச்சராகி விட்டார்! தெர்மோகோல் புகழ் முன்னாள் அமைச்சர் கிண்டல்…

மதுரை: அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என அமைச்சர் செந்தில் பாலாஜியை, தெர்மோகோல் புகழ் முன்னாள்  அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அஞ்சலி நிகழ்ச்சி குறித்து எடப்பாடி ஆதரவு அதிமுக  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். தொடர்ந்து ஜெயலலிதா நினைவு தினம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  அதிமுகவை யாரும்  குறைத்து மதிப்பிட முடியாது. அண்ணன் தம்பிகள் போல் ஒன்றுபட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறோம் என்றவர்,  நாங்கள் பனங்காட்டு நரிகள் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்றவர்,  எங்களை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். நம்பாவிட்டால் ஆற்றிலே விட்டுவிடுவோம். அதிமுகவை நம்பியவர்கள் கேட்டதில்லை. நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம் என கூறினார்.

மேலும் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஆகும் தகுதியில்லை என கூறியதுடன், அவர் எதிர்க்கட்சி தலைவராக  இருக்கத்தான் தகுதி உண்டு விமர்சித்ததுடன்,  100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்வதற்காக ஆதார் அணைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என கிண்டலடித்தார்.

தெர்மோகோல் புகழ் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செந்தில் பாலாஜியை விமர்சிக்க தகுதியற்றவர் என நெட்டிசன்கள் விமர்சித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.