தலித் என்பதால் ஊருக்குள் வீடு கட்டிக்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர் உட்பட பலர் இடையூறு செய்வதாக பெண் கூலித் தொழிலாளி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நல்லம்மாள். இவர் தலித் ஜாதியை சேர்ந்தவரான இவருக்கு ஊரின் மையத்தில் உள்ள சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கவுன்சிலர் பழனிச்சாமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலித் ஊருக்குள் வீடு கட்டக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். மேலும் மின்சாரம் குடிநீர் இணைப்பையும் துண்டித்து விட்டதாக நல்லம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.