ஹூப்பள்ளி, ஹூப்பள்ளி நகரில், போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து வருகிறது. 11 மாதங்களில் 6.5 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.
ஹூப்பள்ளி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
சாலை போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 6.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஹெல்மெட் அணியாதது தொடர்பாக மட்டுமே, 37 ஆயிரத்து 846 வழக்குகள் பதிவாகியுள்ளன. மதுபானம் குடித்து வாகனம் ஓட்டியது, அதிவேகம், ஒரே பைக்கில் மூவர் பயணித்தது, பார்க்கிங் அல்லாத இடங்களில், வாகனத்தை நிறுத்தியது, வாகனம் ஓட்டும் போது, மொபைல் போன் பயன்படுத்தியது உட்பட மற்ற விதிமீறல் தொடர்பாக, 43 ஆயிரத்து 460 வழக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்து வழக்குகளுக்கும், 6.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement