எதிர்வரும் ஆண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
44 ஆயிரம் மாணவர்கள்
இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாகவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 44 ஆயிரம் மாணவர்கள் தமது உயர்க்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.