"வாக்குவாதம், ஆபாச வாரத்தை" பெண்ணின் தாலியை அறுத்து வீசிய திமுக பிரமுகர்

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக-வை சேர்ந்த சில பிரமுகர்கள் விவசாயிகளை மிரட்டுவது, நிலத்தை அபகரிப்பது, கொலை மிரட்டல் விடுப்பது எனத் தொடர் கதையாகி வருகிறது. நாள்தோறும் திமுக பிரமுகர்கள் குறித்து ஏதாவது புகார் வந்துக்கொண்டே இருக்கிறது. திமுக மேலிடம் எச்சரித்தாலும், சிலர் ஆளும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது 10 கோடி மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பதாகவும், அதைத் தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை அறுத்து வீசியதாகவும் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் காந்தி. இவரது சகோதரர் சுப்பிரமணி. இவர்களுக்கு  சொந்தமாக ஊனை வாணியம்பாடி மதுரா ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலம் உள்ளது. அந்நிலத்தை அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் என்பவர் அபகரித்து விட்டதாக காந்தி மற்றும் சுப்பிரமணி குடும்பத்தினர் வேலூர் மாவட்ட  எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில்,” ஊனை வாணியம்பாடி மதுரா, ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள எங்களது நிலத்தில் திமுக அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஜேசிபி மூலம் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இதை காந்தி மற்றும் சுப்பிரமணியின் மகன்கள், மகள்கள் தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது கவிதா என்ற பெண்ணின் தாலியை அறுத்து வீசியுள்ளார். மேலும் அங்கிருந்த ஆட்களை வைத்து தாக்கி நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடியாட்களை வைத்து குடும்பத்தையே கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். 

எங்களது நிலத்தின் பட்டா மற்றும் வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் புகார் மனு உடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி அலுவலக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தயவு செய்து என் தாலியை கொடுங்கள் எனக் கேட்பது தெரிகிறது. இருத்தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tamil Nadu News

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.